திருகோணமலையில் கடலில் மூழ்கிய இருவர் சடலங்களாக மீட்பு

திருகோணமலையில் கடலில் மூழ்கிய இருவர் சடலங்களாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 4:46 pm

திருகோணமலை அலஸ்தோட்டம் கடலில் மூழ்கி காணாமற்போன இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜாமாலியா மற்றும் பள்ளத்தோட்டம் ஆகிய கடற்கரை பகுதிகளில் இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலை அலஸ்வத்த கடற்பகுதியில் குளிப்பதற்காக சென்றிருந்த ஐவரில் இரண்டு பேர் நேற்று மாலை 5.30 மணியளவில் கடலில் அள்ளுண்டு சென்ற நிலையில் காணாமற்போயிருந்தனர்.

கடற்படையினரும் பொலிஸாரும் பிரதேச மக்களுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலை புளியங்களும் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்