தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு மக்கள் சக்தி குழுவினரிடம் மையிலிட்டி கிராம மக்கள் கோரிக்கை

தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு மக்கள் சக்தி குழுவினரிடம் மையிலிட்டி கிராம மக்கள் கோரிக்கை

தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு மக்கள் சக்தி குழுவினரிடம் மையிலிட்டி கிராம மக்கள் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 9:18 pm

யாழ். மையிலிட்டி துறைமுகத்தை விடுவித்து, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு, அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினரிடம், மக்கள் தெரிவித்தனர்.

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குபட்ட வியாபாரி மூலையிலுள்ள மையிலிட்டி முகாமுக்கு, மக்கள் சக்தி குழுவினர் இன்று சென்றனர்.

யுத்தம் காரணமாக 27 வருடங்களுக்கு முன்னர் மையிலிட்டி கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள், மையிலிட்டி முகாமில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது கிராமத்தையும், மையிலிட்டி துறைமுகத்தையும் விரைவில் விடுவிக்குமாறு இந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மையிலிட்டி முகாம் பகுதியில், சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மையிலிட்டி முகாமை அண்மித்து, சாலம்பை – புலோலி மேற்கு பகுதி மக்களும் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளமையை மக்கள் சக்தி குழுவினர் பதிவு செய்துகொண்டனர்.

விவசாய கிராமமான, திருநாவலூரில் வடிகாண் கட்டமைப்பு சீராக இன்மையால், வயல் நிலங்களுக்குள் வெள்ளம் வடிந்தோடுவதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 20 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவரும், எல்லை ஒழுங்கை – தும்பிளாய் கிராமத்திற்கு மக்கள் சக்தி குழுவினர் சென்றனர்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர், இங்குள்ள கிணறுகளிலிருந்து சுத்தமான குடிநீரை பெற முடியாதுள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கற்கோவளம் கிராமத்தில் வீட்டுத்திட்டம் முழுமை பெறாமையால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதாக இங்குள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்குபட்பட்ட, கரவெட்டி கிழக்கு – கற்குளம் பகுதி மக்களும் சுத்தமான குடிநீரை பெறுவதில் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மூன்று கிலோமீற்றர் தொலைவிற்கு, சென்றே குடிநீரைப் பெற வேண்டியுள்ளதாக இந்த மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

கரவெட்டி கிழக்கு – வளர்மதி பகுதி மக்களும் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளமையை அங்கு சென்ற எமது குழுவினர் அறிந்துகொண்டனர்.

அத்துடன், ஏனைய அன்றாட தேவைகளுக்காக, இந்தக் குளத்திலிருந்தே நீரைப் பெற வேண்டியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்