கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 5:24 pm

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை (31) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய விடுதி வசதி தேவைப்படும் மாணவர்கள் இன்று (30) மாலை 5 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர் விவகார பிரிவிற்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட பீடங்களின் பீடாதிபதிகளை தொடர்பு கொண்டு வினவுமாறு கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மாணவர் விடுதி உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிககைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்