எல்லை நிர்ணய அறிக்கையை ஒரு மாதத்திற்குள் வர்த்தமானியில் பிரசுரிப்பதாக அறிவிப்பு

எல்லை நிர்ணய அறிக்கையை ஒரு மாதத்திற்குள் வர்த்தமானியில் பிரசுரிப்பதாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 9:09 pm

பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான, எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளதால், அது தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் வர்த்தமானியில் பிரசுரிக்கவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணி, உயர்நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுவை இன்று பரிசீலித்த போதே அமைச்சர் சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், உபாலி அபேரத்ன, நலின் பெரேரா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்