இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 6:38 pm

எழிழன் உள்ளிட்ட இறுதிக்கட்ட யுத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட 12, சரணடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு முல்தை்ததீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர்கள் சார்பாக அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்களும், 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி வரை நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் ஒத்திவைத்தார்.

மேலும் அன்றைய தினம் வாய்மூலம் சமர்ப்பனம் செய்யப்படல் வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்