அரசியல் எப்படியானது என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகின்றேன் – சி.வி.விக்னேஸ்வரன்

அரசியல் எப்படியானது என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகின்றேன் – சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 2:12 pm

“அரசியல் எப்படியானது என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகின்றேன்” இவ்வாறு, நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

[quote]அரசியல் எப்படியானது என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகின்றேன். பணம் கொடுப்பவர்கள் ஒருசாரார், பலன் எடுப்பவர்கள் இன்னொருசாரார். ஆனால், அதில் குளிர்காய்பவர்கள் மூன்றாம் தரப்பினர்.[/quote]

இதேவேளை அரசியலில் இடம்பெறும் சூழ்ச்சிகள் தொடர்பிலும் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வை மத்திய அரசாங்கம் தராது போய்விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகவும் சி.வி.விக்னேஸ்வர இதன் போது கூறினார்.

மேலும் வடக்கின் இராணுவ பிரசங்கம் தொடர்பிலும் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்

நேற்று (29) இடம்பெற்ற கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள 500 மாணவர்களுக்கு, கல்விசார் உதவி வழங்கும் நிகழ்வின் போதே வட மாகாண முதலமைச்சர் இந்ந விடயங்களை தெரிவித்திருந்தார்.

பிரதமர் அலுவலகம், சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தை திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

மயூராபதி அம்மன் நலன்புரி சங்கத்தினால் இதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்