ஹொரனை டயர் தொழிற்சாலை தொடர்பில் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது

ஹொரனை டயர் தொழிற்சாலை தொடர்பில் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 7:28 pm

ஹொரனை டயர் தொழிற்சாலை தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என தெரிவித்து, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நேற்று (26) அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

ஹொரனை டயர் தொழிற்சாலையின் முதலீட்டாளர் தொடர்பில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் அது தொடர்பில் அறிந்திருக்கவில்லை, என கடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித்த சுட்டிக்காட்டியிருந்தார்.

அது உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இந்த முதலீட்டாளர் தொடர்பில் முன்னரே பிரதமருக்கு அறிவித்திருந்ததாக நேற்று (26) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் இந்த அறிக்கை தொடர்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதற்கு பதிலளித்தார்.

கேள்வி – ஹொரனை ரபர் தொழிற்சாலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், நீங்கள் அதனை அறியவில்லை எனவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியிருந்தார்.

ராஜித்த சேனாரத்ன, பதில் – இது தொடர்பில் அடுத்த வாரம் ஜனாதிபதி,கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளார், அங்கு உண்மை என்னவென்பதை அறியமுடியும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்