முகமாலை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 5 ஏக்கர் காணி விடுவிப்பு

முகமாலை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 5 ஏக்கர் காணி விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 9:24 pm

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஐந்து ஏக்கர் காணி இன்று (27) விடுவிக்கப்பட்டது.

கிளிநொச்சி – முகமாலையில், இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்திருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

552 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியினால், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம்,காணிகளுக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

ஒன்பது பேருக்கான காணிகளே இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்