மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 8:04 pm

மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் சுட்டிகாட்டுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்வதுடன், நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்வதுவரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வௌ்ளம் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பஸ் நிலையத்தில் வௌ்ளம் தேங்கியுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வவுனியா – பெரியகுளம் பகுதியிலுள்ள வீடுகளிலும் வௌ்ளம் நிறைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வுவனியா – திருநாவற்குளம் கிராமத்திலுள்ள வீடுகளில் வௌ்ளம் நிறைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்வதால் மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை – நாவிதன்வெளி பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி பாலத்தினூடாக வௌ்ளம் பாய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்துவந்த மழை தற்போது ஓரளவு குறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தனர்.

வெள்ளம் நிறைந்துள்ளதால் மண்டூர் – வெல்லாவெளி, வீரமுனை – சொறிக்கல் முனை வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் தாழ் நிலப்பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.

திருகோணமலையில் தொடர்ச்சியாக பெய்த மழை தற்போது ஓரளவு குறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்