மக்கள் பிரச்சினைகளை அறியும் நோக்கில் மக்கள் சக்தி குழுவினர் இன்றும் பல பகுதிகளுக்கு விஜயம்

மக்கள் பிரச்சினைகளை அறியும் நோக்கில் மக்கள் சக்தி குழுவினர் இன்றும் பல பகுதிகளுக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 8:17 pm

முல்லைத்தீவிலுள்ள, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர், இன்றும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்தனர்.

முல்லைத்தீவு, செம்மலை, நாயாறு, கள்ளப்பாடு, தீர்த்தக்கரை ஆகிய கிராமங்களுக்கு இன்று எமது குழுவினர் விஜயம் செய்தனர்.

மீனவ கிராமமான நாயாறு பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து மக்கள் சக்தி குழுவினர் பதிவு செய்துகொண்டனர்.

தென்பகுதி மீனவர்கள் மீன்பிடி பருவகாலங்களில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்படுவதாகவம் இந்த மீனவர்கள் குறிப்பிட்டனர்.

கடற்கரையில் வெளிச்சமின்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதிக்கு சென்ற, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்