புல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணை

புல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணை

புல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 1:43 pm

திருகோணமலை புல்மோட்டை கனியவள நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பதில் வழங்குவதற்கு புல்மோட்டை கனிய வள நிறுவனத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக சேவையாற்றும் அசோக பீரிஸ் நேற்று (26) கோப் குழு முன்னிலையில் ஆஜராகியதாக, கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதன்போது, புல்மோட்டை கனிய வள நிறுவனத்தின் மறுசீரமைப்பிற்கான தேவைப்பாடு தொடர்பில் அசோக பீரிஸிடம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

அசோக பீரிஸிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் பிரகாரம் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்