அர்ஜூன் மகேந்திரன் அரச பதவியொன்றை வகிக்கின்றாரா என்பது தொடர்பில் விவாதம்

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவியொன்றை வகிக்கின்றாரா என்பது தொடர்பில் விவாதம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 7:17 pm

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் இருந்து அர்ஜூன் மகேந்திரன் நீக்கப்பட்டதன் பின்னர், அரச பதவியொன்றை வகிக்கின்றாரா என்பது தொடர்பில் தற்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான முன்னணி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் அவர் பதவியொன்றை வகிப்பதுடன், நிதி அமைச்சின் கூட்டங்களில்
பங்கேற்பதாகவும், தற்போதைய மத்திய வங்கி ஆளுனருக்கு ஆலோசனை வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கு நேற்று மாலை நிதி அமைச்சர் பதில் வழங்கினார்.

[quote]பிரதமர் அழைத்தால் கட்டாயமாக எந்தவொரு நபரையும் அழைத்து வருவோம். பிரச்சினையொன்றை தோற்றுவிக்க முற்படுகின்றார்கள். இவ்வாறான ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக நீங்களே கூறுகின்றீர்கள். அவ்வாறு நியமிக்கவில்லை என நிதி அமைச்சிலுள்ள நாம் கூறினோம். எனினும் பிரதமர் அல்லது ஜனாதிபதி எவரேனும் ஒருவர் அவரை அந்த கூட்டங்களுக்கு அழைத்தால் அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. என்னிடம் நியமனம் வழங்கப்பட்டதாக என கேட்டனர். நான் அவ்வாறு நியமிக்கவில்லை.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்