ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 2:47 pm

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ”ஹெஜின்” கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கணக்காய்வு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கிடைத்துள்ள சகல முறைப்பாடுகளையும் கவனத்திற்கொண்டு அறிக்கையைத் தயாரிக்குமாறு பரிந்துரைத்துள்ளதாக கோப் எனப்படும் பொது முயற்சியான்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறிகள் விநியோக விவகாரம் தொடர்பில் அறிக்கை பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதற்கடுத்ததாக கடந்த காலப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டதாக சுனில் ஹந்துன்னெத்தி கூறினார்.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து அறிக்கைகளைப் பெற்று, அமைச்சு மட்டத்திலும் பெற்றோலிய கூட்டுத்தாபன மட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தகவல்களைத் திரட்டி கணக்காய்வாளரால் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கோப் குழு தீர்மானித்துள்ளதாகவும் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அதன் பின்னர் கோப் குழு முன்பாக சாட்சியாளர்களை அழைத்து விசாரணைகளைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்