ராஜிவ் கொலை: தண்டனை அனுபவிப்போரை விடுவிக்க வேண்டுமென முதல்வரிடம் அற்புதம்மாள் கோரிக்கை

ராஜிவ் கொலை: தண்டனை அனுபவிப்போரை விடுவிக்க வேண்டுமென முதல்வரிடம் அற்புதம்மாள் கோரிக்கை

ராஜிவ் கொலை: தண்டனை அனுபவிப்போரை விடுவிக்க வேண்டுமென முதல்வரிடம் அற்புதம்மாள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 4:08 pm

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருவோரை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை நேற்று (25) சந்தித்தபோதே அற்புதம்மாள் இந்த கோரிக்கையை விடுத்ததாக ”த ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தனது மகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதாக இரண்டு முறை அறிவித்த போதிலும், அது தடைப்பட்டதாகவும், இனிமேலும் அவர்களின் விடுதலைக்கு தடை ஏற்படக்கூடாது என்றும் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

தமது மகனான பேரறிவாளன் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவரை விடுதலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் முதல்வரிடம் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தாம் ஆலோசித்து வருவதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தம்மிடம் கூறியதாகவும் முதல்வர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் அற்புதம்மாள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 வருடங்களாக தமது மகன் பேரறிவாளன் சிறையிலுள்ளதாகவும், அவர் இந்தக் கொலை வழக்குடன் தொடர்புபடவில்லை என பலர் கூறியுள்ள நிலையில், தண்டனைக்காலம் நீண்டு செல்வதாகவும் அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்