யாழ். பல்கலைக்கழக மகளிர் விடுதியில் தீ பரவல்

யாழ். பல்கலைக்கழக மகளிர் விடுதியில் தீ பரவல்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:24 pm

யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் உள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில் தீ பரவியது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் தீ பரவியதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

மகளிர் விடுதியில் உள்ள அறையொன்றில் மாணவி ஒருவரால் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கீழே வீழ்ந்து தீ பரவியுள்ளது.

தீ காரணமாக குறித்த அறை முற்றாக எரிந்துள்ளதுடன், அறையில் தங்கியிருந்த மூன்று மாணவிகளின் உடைமைகள் தீக்கிரையாகியுள்ளன.

அம்மூன்று மாணவிகளுக்கும் தேவையான ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து குறித்த விடுதியிலுள்ள மாணவிகள் பிறிதொரு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதுடன் தீயால் ஏற்பட்டுள்ள சேத விபரம் குறித்து மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்