துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து நரம்பியல் நோய் விசேட நிபுணரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து நரம்பியல் நோய் விசேட நிபுணரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து நரம்பியல் நோய் விசேட நிபுணரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 4:22 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நோய் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிடாத குற்றச்சாட்டின் கீழ், துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பான வைத்திய அறிக்கையொன்றை அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

துமிந்த சில்வா பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட 2011, 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்காமையால் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்