தமிழ் அரசியல் கைதிகள் 73 பேர் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகள் 73 பேர் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:33 pm

கொழும்பு மெகசீன் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 73 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 54 தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந் தனசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் 19 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதத்தில் இன்று ஈடுபட்டனர்.

காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்