டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 1500 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 1500 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 1500 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 3:01 pm

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 1500 பேரை இணைத்துக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 4,960 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, கம்பஹா, அம்பாறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்