காணாமற்போனோரை இலங்கையில் தேட முடியாது; கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் – பிரதமர்

காணாமற்போனோரை இலங்கையில் தேட முடியாது; கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் – பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:58 pm

காணாமற்போனோரை இலங்கையில் தேட முடியாது எனவும் படகில் கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று (25) தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை தாம் அறிந்துகொள்ள விரும்புவதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க வினவியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

[quote]இந்த நபர்கள் தொடர்பான எவ்வித தகவலையும் இலங்கைக்குள் தேட முடியாது என பொலிஸார் கூறுகின்றனர். தற்போதுள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக அவர்கள் கூறினார்கள். ஏனையவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இலங்கையில் இல்லை. வெளிநாடு சென்றார்கள் என சட்டரீதியான தகவல்களும் இல்லை. படகில் கள்ளத்தனமாக சென்றார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். சிலர் உயிருடன் இல்லை என சந்தேகிக்கப்படுகின்றது. சாட்சியங்கள் இல்லாதவர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் அவதானிக்க வேண்டும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்