காணாமற்போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

காணாமற்போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:11 pm

காணாமற்போனவர்களின் உறவினர்களால் நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

காணாமற்போனவர்களின் உறவினர்களின் கோரிக்கை தொடர்பில் பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருடன் எதிர்வரும் 9 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடத்த எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கப்பட்டதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்