களனி ஆறு அசுத்தமடைதல் அதிகரிப்பு: கழிவுப் பொருட்களை கலப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

களனி ஆறு அசுத்தமடைதல் அதிகரிப்பு: கழிவுப் பொருட்களை கலப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

களனி ஆறு அசுத்தமடைதல் அதிகரிப்பு: கழிவுப் பொருட்களை கலப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 3:39 pm

களனி ஆறு அசுத்தமடைதல் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆற்று நீரைப் பயன்படுத்துவோர் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் வறட்சியான காலநிலை நிலவியதால் ஆற்று நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடான கொழும்பு மாநகருக்கான நீர் விநியோகம் சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்துகுடாராச்சி குறிப்பிட்டார்.

களனி ஆற்றை அண்மித்துள்ள ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிலையங்களினால் ஆற்றில் கழிவுப்பொருட்கள் கலப்பதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆற்றில் கழிவுப்பொருட்களைக் கலப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கே.எச்.முத்துகுடாராச்சி தெரிவித்தார்.

களனி ஆற்றின் 12 இடங்களில் நீர் மாசு தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்