ஒலிம்பிக் பதக்கத்தை இழக்கிறார் உசைன் போல்ட்

ஒலிம்பிக் பதக்கத்தை இழக்கிறார் உசைன் போல்ட்

ஒலிம்பிக் பதக்கத்தை இழக்கிறார் உசைன் போல்ட்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 5:17 pm

ஒலிம்பிக் போட்டிகளின் போது தனது சக வீரரான நெஸ்ட்டா கார்ட்டர் தடை செய்யப்பட்ட பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால், உசைன் போல்ட் பெற்றுக்கொண்ட 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்றைத் திருப்பியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் போட்டியில் ஜமைக்கா அணி தங்கம் வென்றது.

இந்தப் போட்டியில் உசைன் போல்ட்டுடன் நெஸ்ட்டா கார்ட்டரும் ஓடியிருந்தார்.

கடந்த ஆண்டு, சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) மறுபடியும் மேற்கொண்ட 454 ஊக்க மருந்து மாதிரி சோதனைகளில் கார்ட்டரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருளான மெத்தில் ஹெக்ஸா நெமினேன் என்ற வேதிப்பொருளை அவர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற அணியிலும் 31 வயதான கார்ட்டர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்