ஒட்டுசுட்டான் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த மக்கள் சக்தி குழுவினர்

ஒட்டுசுட்டான் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த மக்கள் சக்தி குழுவினர்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:20 pm

பின்தங்கியுள்ள மக்களின் துயர் அறிந்து அவற்றிற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” திட்டம் இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன சாலம்பன், முத்தையன்கட்டு, ஜீவநகர் மற்றும் பலம்பாசி ஆகிய கிராமங்களுக்கு இன்று எமது குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.

தமது கிராமங்களுக்கான வீதிகள் சீராக இல்லாமையாலும் தொழில் வாய்ப்புகளின்றியும் இங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இங்கு இந்திய வம்சாவளி மக்களே அதிகளவில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்