ஊர்காவற்துறையில் கொலையுண்ட கர்ப்பிணிப் பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன

ஊர்காவற்துறையில் கொலையுண்ட கர்ப்பிணிப் பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:29 pm

யாழ். ஊர்காவற்துறையில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன.

25 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கடந்த 24 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நேற்று மாலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம், அப்பெண்ணின் தலையின் பின்புறம் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்தது.

கொலையுண்ட பெண்ணின் கணவர் யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர் எனவும், அவர் பணிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சுருவில் பகுதியில் வசித்து வந்த ந.கம்சிகா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் 4 வயது பெண் பிள்ளைக்கு தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை தொடர்பில் இதுவரை 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்