இலங்கையில் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

இலங்கையில் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:43 pm

இந்தியாவின் 68 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங்க சந்து தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ மரியாதை அணிவகுப்புடன் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் இலங்கையில் வாழும் இந்திய பிரஜைகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதவேளை, யாழ். நல்லூரில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவரின் வாசஸ்தலத்தில், இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் மற்றுமொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடியரசு தின நிகழ்வில் மகாகவி சுப்பிமணிய பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி மற்றும் அவரது மனைவி சாந்தாலக்ஷ்மி கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை இந்திய துணைத்தூதுவர் ஏ. நடராஜன் வாசித்தார்.

இதேவேளை, இந்தியாவின் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்