இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா: முதன்முறையாகக் கொடியேற்றினார் தமிழக முதல்வர்

இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா: முதன்முறையாகக் கொடியேற்றினார் தமிழக முதல்வர்

இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா: முதன்முறையாகக் கொடியேற்றினார் தமிழக முதல்வர்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 4:34 pm

இன்று இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

குடியரசு தின விழாவை ஒட்டி தமிழகத்தின் சென்னையிலுள்ள மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

இதன்போது ஓ.பன்னீர்செல்வம் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

வழக்கமாக சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வரும் மெரினா கடற்கரையில் ஆளுநரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வர். விருதுகளையும் பதக்கங்களையும் முதல்வர் வழங்கி வைப்பார்.

ஆனால், தற்போது தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதாலும் முதன்முறையாக குடியரசு தினத்தில் தமிழக முதல்வர் கொடியேற்றியிருக்கிறார்.

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் இரண்டாவது குடியரசு தின விழா இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்