ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட அர்ஜூன் மகேந்திரன்: ஊழலுக்கு எதிரான முன்னணி கேள்வி

ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட அர்ஜூன் மகேந்திரன்: ஊழலுக்கு எதிரான முன்னணி கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 8:56 pm

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் அண்மையில் நிதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தபோது சில விடயங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டமை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனரிடம் ஊழலுக்கு எதிரான முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

ஊழலுக்கு எதிரான முன்னணி இரண்டு கடிதங்களை இதற்காக அனுப்பி வைத்துள்ளது.

அர்ஜூன் மகேந்திரன் தொடர்பிலான ஊடக அறிக்கை என்ற தலைப்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிற்கு ஊழலுக்கு எதிரான முன்னணி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

கடந்த நவம்பர் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு நிதி அமைச்சரின் தலைமையிலும் அமைச்சின் செயலாளரின் அழைப்பின் கீழும் நடைபெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அர்ஜூன் மகேந்திரன் கலந்துகொண்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது வங்கிகளின் கடன் வழங்கல் மூலதனத்தை அதிகரித்தல், வரவு செலவுத்திட்ட குறைநிரப்பு விடயங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு அர்ஜூன் மகேந்தரன் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடயங்களில் எந்த அடிப்படையில் அர்ஜூன் மகேந்திரன் தலையிட முடியும் என ஊழலுக்கு எதிரான முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன், ஊழலுக்கு எதிரான முன்னணி இலங்கை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்