மட்டக்களப்பில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்

மட்டக்களப்பில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்

மட்டக்களப்பில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 6:47 pm

வௌ்ளம் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த மட்டக்களப்பு – பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளும் நாளை (26) வழமைபோல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலையர்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆனைக்கட்டியவெளி நாமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வௌ்ளம் காரணமாக இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

குறித்த மூன்று பாடசாலைகளுக்கான வீதிகளில் வௌ்ளம் நிரம்பிக் காணப்பட்டதால் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது வௌ்ளம் வீதிகளில் வடிந்தோடி வருகின்ற நிலையில், நாளை (26) பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளைநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் வெல்லாவெளி – மண்டூர் மற்றும் பாலையடிவட்டை செல்லும் வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நாவிதன்வெளி பாலத்தினூடாக வௌ்ளம் பாய்ந்து செல்வதுடன் போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்