50 வயது மகளுக்காக யாசகம் கேட்ட 78 வயது மூதாட்டி: அனாதை இல்லம் அழைத்துச்சென்றார் அருட்சகோதரி

50 வயது மகளுக்காக யாசகம் கேட்ட 78 வயது மூதாட்டி: அனாதை இல்லம் அழைத்துச்சென்றார் அருட்சகோதரி

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 9:45 pm

தெரணியகல – மாலிபொட தோட்டத்தில் வசிக்கும் 78 வயதான மூதாட்டி ஒருவர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட 50 வயதான தனது மகளைப் பராமரிப்பதற்காக யாசகம் கேட்டு வந்தார்.

இந்த மூதாட்டியைப் பற்றி கடந்த 10 ஆம் திகதி நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து பலரும் இவர்களுக்கு உதவி புரிய முன்வந்தனர்.

இந்நிலையில், இவ்விருவரையும் திருகோணமலையில் உள்ள அநாதை இல்லத்திற்கு அழைத்துச் செல்ல அருட் சகோதரி ஒருவர் முன்வந்தார்.

அந்த அருட்சகோதரி இன்று அவர்களை அழைத்துச் சென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்