மேன்பவர் நிறுவன ஊழியர்கள் 37 பேரும் பிணையில் விடுதலை

மேன்பவர் நிறுவன ஊழியர்கள் 37 பேரும் பிணையில் விடுதலை

மேன்பவர் நிறுவன ஊழியர்கள் 37 பேரும் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 6:11 pm

கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மின்சார சபையின் மேன்பவர் நிறுவன ஊழியர்கள் 37 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொள்ளுப்பிட்டி, ஆனந்தகுமார சுவாமி மாவத்தையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடைபாதையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து கைதான மேன்பவர் நிறுவன ஊழியர்கள் 37 பேரும் பொலிஸாரினால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் இருக்கின்ற போதிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படும் உரிமை எவருக்கும் இல்லையென நீதவான் விசாரணையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டளையை மீறுவது பாரதூரமான குற்றமாகும் என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்