முகத்துவாரம் கடற்பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

முகத்துவாரம் கடற்பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

முகத்துவாரம் கடற்பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2017 | 12:53 pm

மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பகுதியில் மூன்று பேர் பயணித்த மீன்பிடி படகொன்று கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் உயிர்த்தப்பியுள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்த ஒருவரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரையொதுங்கியதாகவும் மற்றையவரின் சடலம் இன்று அதிகாலை 2 மணியளவில் கரையொதுங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியை சேர்ந்தவர்களே அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்..

சீரற்ற வானிலைக் காரணமாக கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மூன்று பேரும் நேற்று காலை கடலுக்குச் சென்றுள்ளனர்.

மீன்பிடியில் ஈடுபட்டு நேற்று மாலை கரைதிரும்புகையில் முகத்துவாரதிற்கு சுமார் 100 மீற்றர் தொலைவில் அவர்களுடைய மீன்பிடி படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்