மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2017 | 1:32 pm

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடனான வானிலை நிலவுவதால் மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாலையர்கட்டு அரசினர் தமிழ் கழவன் பாடசாலை, சின்னவத்தை அரசினர் தமிழ் கழவன் பாடசாலை மற்றும் ஆனைக்கட்டியவெளி நாமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று கையொப்பமிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூன்று பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகளில் வௌ்ளம் நிரம்பிக் காணப்படுவதால் பாடசாலைகளுக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படுமா அல்லது தொடர்ந்து விடுமறை வழங்கப்படுமா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிக மழைக் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் ஐந்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய குளங்களின் நீர்மட்டம் 28 வீதமாக காணப்படுவதாக நீர்பாசனத் திணைக்களத்தின், நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சீனிதம்பி மோகனராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, நிலவும் மழையுடனான வானிலை தொடருமானால் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கிடைக்கும் எனவும் நீர்பாசனத் திணைக்களத்தின், நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சீனிதம்பி மோகனராஜ் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்