பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கு இன்று முதல் இணையத்தளம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்

பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கு இன்று முதல் இணையத்தளம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்

பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கு இன்று முதல் இணையத்தளம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2017 | 9:05 am

பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கு இணையத்தளம் ஊடாக இன்று முதல் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான மாணவர் கையேடு தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளது.

கையேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வகையில் தேவையான ஆலோசனைகளை அறிந்துக் கொண்டு அறிவகங்களுக்கு சென்று இணையத்தள்த்தினூடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிவகங்களில் பணிப்புரிவோருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இணையத்தள பதிவுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பயிற்சி வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் உதவியுடனும் மாணவர்கள் இணையத்தளத்தினூடாக பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்