டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2017 | 10:04 am

டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழலிலும் பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

இதற்கமைய தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் அவ்வாறு அகற்றப்படாத சந்தர்ப்பத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒருவருக்கு காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்