சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மேன்பவர் ஊழியர்கள் 37 பேர் கைது

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மேன்பவர் ஊழியர்கள் 37 பேர் கைது

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மேன்பவர் ஊழியர்கள் 37 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2017 | 7:17 am

மின்சக்தி மற்றும் மீள் புதுபிக்கதக்க சக்தி அமைச்சின் வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மேன்பவர் ஊழியர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌ்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி,பொரளை ,நாராஹென்பிட்டி மற்றும் கருவாத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 67 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி மேன்பவர் ஊழியர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டமையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள 37 பேரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தமது ஊழியர்களை நேற்றிரவு பொலிஸார் கைது செய்ததாக இலங்கை மின்சார சபையின், கட்டண பட்டியல் விநியோகிக்கும் ஊழியர்களின் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்