அம்பலப்பெருமாள் குளம் மக்களின் அவலம் போக்கியது மக்கள் சக்தி

அம்பலப்பெருமாள் குளம் மக்களின் அவலம் போக்கியது மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 10:09 pm

முல்லைத்தீவு – கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் அன்றாடம் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர்.

”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” திட்டம் மூலம் அடையாளம் காணப்பட்ட இந்த பிரச்சினைக்கு ”மக்கள் சக்தி, 100 நாட்கள்” திட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நியூஸ்பெஸ்ட் சக்தி வானொலியின் உப முகாமையாளர் நாகலிங்கம் ஜெகநாத் கண்ணா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்