விமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்

விமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்

விமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2017 | 1:27 pm

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்தே விமல் வீரவன்சவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை முறையின்றி பயன்படுத்திய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விமல் வீரவன்ச உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதுவரை கிடைத்துள்ள சாட்சியங்களின் பிரகாரம், சந்தேகநபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதவான், சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கையை நிராகரித்து அவர்களின் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் கீழிருந்த மூன்று வாகனங்களை, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கு வழங்கியிருந்ததாக இந்த விவகாரத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய இந்த வாகனங்கள் உரிய விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதவான், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

இதுதவிர, சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற அறைக்குள் இருந்த ஒருவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதால், அவரைக் கைதுசெய்யுமாறும் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்