முல்லைத்தீவு மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்த மக்கள் சக்தி குழுவினர்

முல்லைத்தீவு மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்த மக்கள் சக்தி குழுவினர்

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 9:49 pm

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் சக்தி குழுவினர் இன்று முல்லைத்தீவின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்தனர்.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிராட்டக்குளம் பகுதிக்கு விஜயம் செய்து, மக்களின் பிரச்சினைகளை மக்கள் சக்தி குழுவினர் பதிவு செய்தனர்.

சிராட்டிக்குளத்திற்கு செல்லும் வீதி புனரமைக்கப்படாமல் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன் குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனையடுத்து, நெட்டாங்கண்டல் பகுதிக்கு சென்ற மக்கள் சக்தி குழுவினர் நெட்டாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கும் சென்றனர்.

மேலும், மக்கள் சக்தி குழுவினர் பூவரசன்குளம் மற்றும் பொன்நகர் ஆகிய பகுதிகளுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளைப் பதிவு செய்தனர்.

குறிப்பாக பூவரசன்குளம் மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளமையை மக்கள் சக்தி குழுவினரால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட மக்கள் சக்தி குழுவினர், கடுவன, கெசெல்வத்த மற்றும் கம்மல்தொட மக்கள் எதிர்நோக்கியுள்ள பாலம் இல்லாமை தொடர்பான பிரச்சினை குறித்து ஆராய்ந்தனர்.

மற்றுமொரு குழுவினர் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்றனர்.

இதன் போது காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்ற மக்களையும் மக்கள் சக்தி குழுவினர் சந்தித்தனர்.

இதன்போது மக்கள் தமது துயரத்தை எமது குழுவினருடன் பகிர்ந்து கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்