முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று

முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று

முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2017 | 9:42 am

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்றுமுற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் விநியோக சம்பவம் தொடர்பாக சபை ஒத்திவைப்புவேளை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டதுடன், அந்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, வெளியிட்டபின்னர், அதில் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் மற்றுமொரு தரப்பினரால் அடிக் குறிப்புகள் இடப்பட்டிந்தமை சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.

இதனையடுத்து அந்த அறிக்கையை சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்த நிலைமையின் கீழ் மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்