பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்க தீர்மானம்

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்க தீர்மானம்

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2017 | 7:56 am

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடமைபுரியும் காலபப்குதியில் பஸ் சாரதிகளும், நடத்துனர்களும் தங்களின் கடமைக்கான அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாகும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜீ.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் அறவிடுதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பஸ் நடத்துனர்கள் தொடர்பில் கிடைக்கும் முறைபாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான சீருடை மற்றும் கடமைநேர அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்