எல்லை நிர்ணய குழு அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள்

எல்லை நிர்ணய குழு அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள்

எல்லை நிர்ணய குழு அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2017 | 7:39 am

எல்லை நிர்ணய குழு அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள் காணப்படுவதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எல்லை நிர்ணய குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.

குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அறிக்கையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் குழுவின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தாம் வாக்குறுதியளித்தவாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்