இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு டி வில்லியர்ஸ் அணித் தலைவராக நியமனம்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு டி வில்லியர்ஸ் அணித் தலைவராக நியமனம்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு டி வில்லியர்ஸ் அணித் தலைவராக நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 5:02 pm

இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா 2-0 எனக் கைப்பற்றியது.

தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் முடிந்த பின் 28 ஆம் திகதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகின்றது.

இதற்கான தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக முழங்கை காயத்தால் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ் காயத்தில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதால் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாத காலமாக டி வில்லியர்ஸ் அணியில் இடம்பெறாததால் டு பிளிசிஸ் தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக செயற்பட்டார். இவர் தலைமையில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.

மேலும், அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 எனவும், சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 எனவும் கைப்பற்றியது.

காயத்தில் இருந்து மீண்ட டி வில்லியர்ஸ், டெஸ்ட் அணியின் தலைவராக இருக்கப்போவதில்லை என்றும், 2019 ஆம் ஆண்டின் 50 ஓவர், டி20 உலகக்கோப்பை தொடர்தான் தன்னுடைய குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிக்கான தென்னாபிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. பர்ஹான் பெஹார்டியன், 4. குயிண்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), 5. ஜே.பி. டுமினி, 6. டு பிளிசிஸ், 7. இம்ரான் தாஹிர், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. வெயின் பர்னெல், 11. லங்கி நிகிடி, 12. பெலுக்வாயோ, 13. பிரிட்டோரியஸ், 14. காகிசோ ரபாடா, 15. தப்ரைஸ் ஷாம்சி.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக பங்கேற்பதற்கு முன் நாளை இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டி வில்லியர்ஸ் களம் இறங்க இருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்