ஆசிய பசுபிக் நாடுகளுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இரத்து: ட்ரம்ப் அதிரடி

ஆசிய பசுபிக் நாடுகளுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இரத்து: ட்ரம்ப் அதிரடி

ஆசிய பசுபிக் நாடுகளுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இரத்து: ட்ரம்ப் அதிரடி

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 3:22 pm

ஆசிய பசுபிக் நாடுகளுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளோடு அமெரிக்கா செய்து கொண்டுள்ள டிரான்ஸ் பசுபிக் கூட்டு ஒப்பந்தத்தை (Trans-Pacific Partnership deal) இரத்து செய்யும் கோப்பில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவை விட மற்ற நாடுகளே அதிகம் பயனடைகின்றன என்பது ட்ரம்பின் கருத்தாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிற நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்திக்கொள்வதாக தேர்தல் பிரசாரத்தின் போது ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

ஜப்பான், மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், சிலி, புருனே, நியூசிலாந்து, கனடா, மெக்ஸிக்கோ, பெரு உள்ளிட்ட 12 நாடுகள் ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையில் உள்ளன.

முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அதிரடியாக ட்ரம்ப் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்