அமெரிக்காவைத் தாக்கிய கடும் புயலில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவைத் தாக்கிய கடும் புயலில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவைத் தாக்கிய கடும் புயலில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 3:48 pm

அமெரிக்காவில் வீசிய கடும் புயலில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜார்ஜியா, மிஸ்ஸிஸிப்பி, ஃபுளோரிடா ஆகிய மாகாணங்களில் புயலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.

புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா மாகாணத்தில் புயலில் சிக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த மாகாணத்தின் குக் மாவட்டப் பகுதியில் மட்டுமே வீடுகள் தகர்ந்து வீழ்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நான்கு பேர் புயலுக்கு பலியாகியதாக பேரிடர் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜியா மாகாணத்தின் அல்பேனி நகரில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

மாகாணத்தின் கரையோரப் பகுதியில் புயல் வேகத்தால் பெரும்பாலான மின் கம்பங்கள் சரிந்துள்ளன. பல இடங்களில் தொலைத் தொடர்பு வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பலரைப் பற்றிய தகவல்கள் இல்லாததால், மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் வீடு வீடாகச் சென்று அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்