வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 8:32 pm

வட மாகாணத்தில் கஷ்ட்டப் பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஸ்தாபன விதிக் கோவைப்படி இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கதினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 10 ஆம் திகதி நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தை அடுத்து மூன்று ஆசியர்கள் இடைநிறுத்தப்பட்டமையைக் கண்டித்தும், இடமாற்றங்கள் பாரபட்சமின்றி அலுல்படுத்தப்பட வேண்டும், எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் வட மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட மூன்று ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக இவர்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்