ரயில்கள் ஊடாக போதைப்பொருள் கடத்துவது தொடர்பில் தகவல்

ரயில்கள் ஊடாக போதைப்பொருள் கடத்துவது தொடர்பில் தகவல்

ரயில்கள் ஊடாக போதைப்பொருள் கடத்துவது தொடர்பில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 4:44 pm

ரயில்கள் ஊடாக போதை பொருள் கடத்துவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

மத்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைபொருள் கடத்தல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் காங்கேசன்துறை நோக்கி பயணித்த 89 ஆம் இலக்க ரயிலில் 20 போதைப்பொருள் பக்கட்டுக்கள் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹவ ரயில் நிலையத்தில் சிறுதொழில் புரியும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரயில்களினூடாக போதைப் பொருள் கடத்துதல் தொடர்பில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்