மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 7:19 pm

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு அருகில் மேல்கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் மிதந்துகொண்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை, கிரேட்வெஸ்டன் கல்கந்த தோட்டத்தில் வசிக்கும் 30 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாக உறவினர்களால் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்