முறிகள் விநியோகம் தொடர்பான விசாரணைகளுக்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

முறிகள் விநியோகம் தொடர்பான விசாரணைகளுக்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 3:31 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு, அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மூவரடங்கிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கணக்காய்வு தொடர்பான நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான வரத்தமானி இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படுதல் வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்