பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 2:54 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமச்சர் சிவநேசன்துரை சந்திகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியுமான எம்.ரி.முஹைதீனினால் சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம். கலீல் ஆகியோரோ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்