பஸ்யால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு 35 பேர் காயம்

பஸ்யால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு 35 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 3:03 pm

கொழும்பு கண்டி பிரதான வீதியில் பஸ்யால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ்ஸொன்றுடன் லொறி ஒன்று மோதி இன்று (23) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்